பிரவீன் ராஜா நடிக்கும் "மடல்" படத்தின் பூஜை


பிரவீன் ராஜா நடிக்கும் மடல் படத்தின் பூஜை
x
தினத்தந்தி 23 Feb 2025 9:13 PM IST (Updated: 23 Feb 2025 9:15 PM IST)
t-max-icont-min-icon

"மடல்" படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

சிலநேரங்களில் சில மனிதர்கள், அன்பிற்கினியாள், போன்ற படங்களில் நடித்த பிரவீன் ராஜா இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். சந்தானம் நடித்த இங்க நாங்க தான் கிங்கு படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியாலையா இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் நிழல்கள் ரவி, பாலசரவணன், விவேக் பிரசன்னா, கிருஷ்ண தயாள் ஆகியோருடன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் பூஜை இன்று சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் பிரம்மாண்டமாக நடைபெற்றது நடிகர் மணிகண்டன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் துவங்குகிறது.

படம் பற்றி இயக்குனர் ஹரிசங்கர் ரவீந்திரன் பேசியதாவது 'ஹிஸ்டாரிக்கல் கலந்த ஹாரர் படம் இது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றில் நடந்த நம் தமிழ் கலாச்சாரம் பற்றிய ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த திரைக்கதையை உருவாக்கியுள்ளோம். தமிழ் சினிமாவில் ஹாரரில் இதுவரை யாரும் நெருங்காத புதிய கதைக்களத்தை இந்த படத்தில் பார்க்கலாம். ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை' என்றார்.


1 More update

Next Story