ராஷி கன்னாவின் அடுத்த பாலிவுட் படம்


Raashii Khanna bags another Bollywood project
x
தினத்தந்தி 4 Aug 2025 8:45 AM IST (Updated: 4 Aug 2025 8:46 AM IST)
t-max-icont-min-icon

ராஷி கன்னா சமீபத்தில் பவன் கல்யாணின் "உஸ்தாத் பகத் சிங்" படத்தில் இணைந்தார்.

சென்னை,

2025-ம் ஆண்டு ராஷி கன்னாவுக்கு நம்பிக்கைக்குரிய ஆண்டாக மாறி வருகிறது. சமீபத்தில் பவன் கல்யாணின் "உஸ்தாத் பகத் சிங்" படத்தில் இணைந்தார்.

தற்போது அவர் ஒரு புதிய பாலிவுட் படத்தில் பர்ஹான் அக்தருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராஷி இதற்கு முன்பு இரண்டு பாலிவுட் படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்திருந்தாலும், பர்ஹான் அக்தரின் படத்தில் கதாநாயகியாக நடிப்பது இதுவே முதல் முறை.

இதற்கிடையில், சித்து ஜோன்னலகட்டாவுடன் அவர் ''தெலுசு கடா'' என்ற படத்திலும் ராஷி நடித்து வருகிறார். இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story