நானியின் தி பாரடைஸுடன் மோதும் ராம் சரணின் 'பெத்தி'


Ram Charans Peddi to clash with Nanis The Paradise
x
தினத்தந்தி 6 April 2025 1:18 PM IST (Updated: 6 April 2025 1:24 PM IST)
t-max-icont-min-icon

'பெத்தி' படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்விகபூர் நடிக்கிறார்.

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'பெத்தி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

இயக்குனர் புச்சி பாபு இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், 'பெத்தி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி வெளியாக உள்ளது.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அதற்கு 1 நாள் முன்புதான் நானி நடித்துவரும் 'தி பாரடைஸ்' படம் வெளியாகிறது. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் நானியின் படங்கள் பாக்ஸ் ஆபீசில் மோத இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

1 More update

Next Story