ராணாவுக்கு என்னை பிடிக்கவில்லை, ஆனால்... - வைரலாகும் ’காந்தா’ பட நடிகையின் பேச்சு

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வருகிற 14-ம் தேதி வெளியாகவுள்ளது.
சென்னை,
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் ‘காந்தா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் 'மிஸ்டர் பச்சன்' திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வருகிற 14-ம் தேதி வெளியாகவுள்ளது.
இது மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கைக் கதையாக உருவாகியுள்ளது. காந்தா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
அப்போது பாக்யஸ்ரீ போர்ஸ் சில கருத்துகளை தெரிவித்தார். இந்த படத்திற்கான ஆடிஷனுக்காக சென்னை சென்றதாகவும் ஆனால் ராணாவுக்கு எனது லுக் பெஸ்ட் பிடிக்கவில்லை என்றும் பாக்யஸ்ரீ கூறினார். பிறகு என்னைத் தேர்ந்தெடுத்ததாக அவர் தெரிவித்தார்.






