பிரபாஸுடன் எப்போது நடிப்பீர்கள்?...ராஷ்மிகா பதில்

ராஷ்மிகா தற்போது நடித்துள்ள 'தி கேர்ள் பிரண்ட்' படம் வருகிற 7-ம் தேதி திரைக்கு வருகிறது.
சென்னை,
'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு நடிகர் பிரபாஸுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.
'எக்ஸ்' பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடும்போது, ஒரு ரசிகர் பிரபாஸுடன் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டார். இதற்கு பதிலளித்த ராஷ்மிகா, 'பிரபாஸ் சார் இதை பார்ப்பார் என்று நம்புகிறேன், விரைவில் நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம் என்று நம்புகிறேன்' என்றார். அவரது இந்த கருத்து சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ராஷ்மிகா தற்போது நடித்துள்ள 'தி கேர்ள் பிரண்ட்' படம் வருகிற 7-ம் தேதி திரைக்கு வருகிறது.
Related Tags :
Next Story






