’என்டிஆர்-நீல் பட இசை கேஜிஎப், சலார்போல இருக்காது’ : ரவி பஸ்ரூர்

இதில் காந்தாரா 2 படத்தில் நடித்துள்ள ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
Ravi Basrur: My music for NTR-Neel’s Dragon will be nothing like KGF or Salaar
Published on

சென்னை,

பிரபாஸுடன் 'சலார்' படத்திற்குப் பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ''என்டிஆர்நீல்'' படத்தை இயக்கி வருகிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் காந்தாரா 2 படத்தில் நடித்து வரும் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.

இந்நிலையில், ஒரு பேட்டியில், ரவி பஸ்ரூர் இப்படத்திற்கான தனது பணி குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், என்டிஆர்-நீல் படம் இசை ரீதியாகவும், காட்சி ரீதியாகவும் பிரமாண்டமாக இருக்கும். கேஜிஎப் , சலார் படங்களிலிருந்து இப்படத்தின் இசை மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்றார்.

சாலார் படத்திற்குப் பிறகு மீண்டும் பிரசாந்த் நீலுடன் இணைந்து பணியாற்றுவது வீடு திரும்புவது போல் உணர்வதாகவும் அவர் கூறினார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com