ரியோ பிறந்தநாள் - "நிறம் மாறும் உலகில்" படக்குழு வெளியிட்ட வீடியோ

ரியோ ராஜ் பிறந்த நாளை முன்னிட்டு “நிறம் மாறும் உலகில்” படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
ரியோ பிறந்தநாள் - "நிறம் மாறும் உலகில்" படக்குழு வெளியிட்ட வீடியோ
Published on

சென்னை,

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரியோ ராஜ், கடந்த 2019-ல் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்திலும் ஹீரோவாக நடித்து கவனம் பெற்றார். கடந்த ஆண்டு வெளியான 'ஜோ' திரைப்படம் ரியோ ராஜுக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. தற்போது இவர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் 'ஸ்வீட்ஹார்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்துக்கு 'ஆண்பாவம் பொல்லாதது' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரியோ ராஜ் தற்போது அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாகவுள்ளது.

நடிகர் ரியோ ராஜ் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

"நிறம் மாறும் உலகில்" படக்குழுவினர், ரியோ ராஜுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் வீடியோ பதிவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com