ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்கவேண்டும்- இயக்குனர் அட்லீ


ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்கவேண்டும்- இயக்குனர் அட்லீ
x
தினத்தந்தி 11 Oct 2025 12:31 PM IST (Updated: 24 Oct 2025 6:03 PM IST)
t-max-icont-min-icon

ஒரு இயக்குனராக இந்த மாதிரியான படத்தை உருவாக்குவது மிக கடினம் என்று ரிஷப் ஷெட்டியை அட்லீ பாராட்டி பேசியுள்ளார்.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த "காந்தாரா சாப்டர் 1" படம் கடந்த 2ம் தேதி உலகளவில் வெளியானது. ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்திருந்தார். பழங்குடிகள் - மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி. பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து, பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்து வருகிறது.

இந்தநிலையில், "காந்தாரா சாப்டர் 1" படத்தை பாராட்டி பேசிய இயக்குனர் அட்லி, "காந்தாரா சாப்டர் 1 படம் வெளியான அன்று நான் ஆம்ஸ்டர்டமில் இருந்தேன். அப்போது 2 மணிநேரத்திற்கும் மேலாக பயணம் செய்து தியேட்டரில் அந்த படம் பார்த்தேன். உடனடியாக ரிஷப் ஷெட்டிக்கு போன் செய்து பாராட்டுகளை தெரிவித்தேன். ஒரு இயக்குனராக இந்த மாதிரியான படத்தை உருவாக்குவது மிக கடினம். ஆனால் ஒரு நடிகராகவும் ஹீரோவாகவும் அந்த ரிதத்தை அவர் கொண்டு வந்துள்ளார். இந்த படத்திற்க்காக ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்கவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story