திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகை அனஸ்வரா


Roshan: My next film will be announced in January
x

நடிகர் ரோஷன், நடிகை அனஸ்வரா சேர்ந்து இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை,

பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் மேகா, சமீபத்தில் திரைக்கு வந்த சாம்பியன் படத்தில் நடித்திருந்தார். இதில், இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா நடித்திருந்தார். இது அனஸ்வராவின் முதல் தெலுங்கு படமாகும்.

இந்நிலையில் நடிகர் ரோஷன், நடிகை அனஸ்வரா சேர்ந்து, இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த ரோஷன் மேகா, தனது அடுத்த படம் அடுத்தாண்டு ஜனவரியில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு படத்திற்காக நடிகர் ரோஷனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக முன்னதாக தகவல் வெளியானது. இது தவிர, இயக்குனர் சைலேஷ் கொலானுவுடன் ஒரு காதல்-நகைச்சுவை பொழுதுபோக்கு படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அவரது அடுத்த பட அறிவிப்பு வெளியாகும் என்று எதிபார்க்கப்படுகிறது.

1 More update

Next Story