’தி கேர்ள் பிரண்ட்’ - சிறப்புத் தோற்றத்தில் நடிக்க மறுத்த ’அனிமல்’ பட இயக்குனர்?

தி கேர்ள் பிரண்ட் திரைப்படம் நவம்பர் 7-ம் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
ராஷ்மிகா மந்தன்னாவின் தி கேர்ள் பிரண்ட் திரைப்படம் நவம்பர் 7-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த காதல் படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். மேலும் தீக்சித் ஷெட்டி , அனு இம்மானுவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதற்கிடையில், இயக்குனர் ராகுல் ரவீந்திரன் ஆரம்பத்தில் ஒரு கேமியோ ரோலுக்காக சந்தீப் ரெட்டி வங்காவை அணுகியதாகவும், ஆனால் அந்த வேடம் கேமியோவை விட திரை நேரம் அதிகமாக இருந்த காரணத்தால் சந்தீப் அதை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், வெண்ணிலா கிசோருக்கு இந்த வேடத்தை வழங்கியதாக தெரிகிறது. ஆனால் அவரும் அதை நிராகரித்ததால், ராகுல் ரவீந்திரனே அதைச் செய்திருக்கிறார். சமீபத்தில் வெளியான டிரெய்லரில் அவர் தோன்றி இருந்தார்.
தி கேர்ள் பிரண்ட் படத்தை தீரஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் பதாகையின் கீழ் வித்யா கோப்பினீடி மற்றும் தீரஜ் மோகிலினேனி ஆகியோர் தயாரித்திருக்கின்றனர். ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.






