சி.வி.குமாரின் “எக்ஸ் ஒய்” படத்தின் படப்பிடிப்பு அப்டேட்


சி.வி.குமாரின்  “எக்ஸ் ஒய்” படத்தின் படப்பிடிப்பு அப்டேட்
x

ரத்திகா ரவீந்தர், அனிஸ் பிரபாகர் நடித்த ‘எக்ஸ் ஒய்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

பீட்சா, சூது கவ்வும், இறுதி சுற்று உள்பட பல படங்களை சி.வி.குமார் தயாரித்துள்ளார். சி.வி.குமார் இயக்கத்தில் 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘மாயவன்’. சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி நடித்த இந்த அறிவியல் புனைவு படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்த ‘மாயவன்’ படத்தை 5 பாகமாக எடுக்க சி.வி.குமார் திட்டமிட்டுள்ளார்.

மாயவன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அறிவியல் புனைவு படத்துக்கு ‘எக்ஸ் ஒய்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். தெலுங்கு நடிகையான ரத்திகா ரவீந்தர், அனிஸ் பிரபாகர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வர்ஷினி வெங்கட், பிரனா, பிரகதீஷ், தர், ரவுடி பேபி வர்ஷு, ஹுசைன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் அறிவியல் புனைவு வகையை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் படமாக இது இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

ஸ்ரீ கிருஷ் பிக்சர்ஸ் சார்பில் சாம்பசிவம் மற்றும் இன்டர்நேஷனல் வழங்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரிஹரன் ஆனந்தராஜா செய்துள்ளார். காந்த், இசை அமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

1 More update

Related Tags :
Next Story