சந்தீப் கிஷனுக்கு முன்பு 'சிக்மா' கதையை கேட்டது இந்த நடிகரா?

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படம் சிக்மா.
சென்னை,
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகப் அறிமுகமாகும் முதல் படத்தின் பெயர் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்திற்கு 'சிக்மா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி ஆக்சன் படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.
இதற்கிடையில், சந்தீப்பை ஜேசன் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, துல்கர் சல்மானை நடிக்க வைக்க விரும்பியதாக இணையத்தில் தற்போது தகவல் பரவி வருகிறது. துல்கருக்கு கதை பிடித்திருந்ததாகவும் , மற்ற படங்கள் காரணமாக, அவர் நடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
'சிக்மா' படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க தமன் இசையமைக்கிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Related Tags :
Next Story






