’அசாத்திய படைப்பு’ - ’சிறை’ படத்திற்கு மாரி செல்வராஜ் பாராட்டு


sirai is an extraordinary creation - Mari Selvaraj
x

அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையையும் துணிச்சலையும் சிறை கொடுக்கும் என்று மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

’அசாத்திய படைப்பு’ - ’சிறை’ படத்திற்கு மாரி செல்வராஜ் பாராட்டு

சென்னை,

விக்ரம் பிரபுவின் சிறை படத்தை பார்த்த மாரி செல்வராஜ் , பாராட்டி பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

’சிறை பார்த்தேன். மனம் அவ்வளவு நிறைவாக இருக்கிறது. எந்த மாதிரியான கதைகளை, எந்த மாதிரியான மனிதர்களை, எந்த மாதிரியான அரசியலை, எந்த மாதிரியான பிரியத்தை சினிமாவாக மாற்றவேண்டும் என்று உணர்ந்த படைப்பாளிகளின் வருகை அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையையும் துணிச்சலையும் கொடுக்கும்.

அப்படியொரு அசாத்தியமான படைப்பாக சிறை வந்திருக்கிறது. தனது முதல் படத்திலே பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும் இயக்குநர் சுரேஷ் இராஜகுமாரிக்கும், இக்கதைதான் எனக்கு வேண்டும் என்று களமிறங்கியிருக்கும் விக்ரம் பிரபு சார் அவர்களுக்கும் , நல்ல படைப்பு நிச்சயம் வெல்லும் என்ற உறுதியோடு இப்படைப்பை தயாரித்து இருக்கும் லலித் அவர்களுக்கும் அறிமுக நாயகனாக களமிறங்கி நம்பிக்கையான நடிப்புக்கு முயற்சித்திருக்கும் எல்.கே அக்‌சய்குமார் அவர்களுக்கும் , சிறந்த இசையை கொடுத்திருக்கும் நண்பர் ஜஸ்டின் பிரபாகரன் அவர்களுக்கும். மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களையும் நன்றியையும் பகிர்ந்துகொள்கிறேன் . இந்த சிறைக்காக நிச்சயம் திரையரங்குகள் நிரம்பவேண்டும்’ என்று தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story