சிவகார்த்திகேயனின் 'மதராஸி' பட ரிலீஸ் அப்டேட்


சிவகார்த்திகேயனின் மதராஸி பட ரிலீஸ் அப்டேட்
x

சிவகார்த்திகேயனின் 23-வது படமான 'மதராஸி' திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார்.

சென்னை,

இன்று தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமான 'மதராஸி' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார். இந்த படத்திற்கு தமிழில் 'மதராஸி' என்றும் இந்தியில் 'தில் மதராஸி' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, தயாரிப்பு நிறுவனம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதராஸி படத்தின் ரிலீஸ் தேதியை இன்று மாலை 5 மணியளவில் வெளியிட உள்ளது.

1 More update

Next Story