கர்ப்பமாக இருப்பதை அறிவித்த தனுஷ் பட நடிகை

இவர் தனுஷுடன் ராஞ்சனா படத்தில் நடித்திருந்தார்.
சென்னை,
பாலிவுட் நடிகை சோனம் கபூர் இரண்டாவது முறையாக தாயாகப் போகிறார். இதை வெளிப்படுத்தும் வகையில் சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு பதிவை வெளியிட்டார்.
சோனம் கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை மணந்தார். இவர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் வாயு என்ற மகன் பிறந்தார். இப்போது அவர் இரண்டாவது குழந்தையைப் பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
சோனம் கபூர் 2007 ஆம் ஆண்டு 'சாவரியா' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு, பிரேம் ரத்தன் தன் பாயோ, நீர்ஜா, சஞ்சு போன்ற படங்கள் அவருக்கு நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன. இவர் தனுஷுடன் ராஞ்சனா படத்தில் நடித்திருந்தார். தற்போது படங்களில் இருந்து சோனம் கபூர் விலகி இருக்கிறார்.
Related Tags :
Next Story






