’பராசக்தி’ - டப்பிங்கை துவங்கிய ஸ்ரீலீலா


sreeleela starts dubbing for Parasakthi
x
தினத்தந்தி 18 Nov 2025 6:47 PM IST (Updated: 18 Nov 2025 7:08 PM IST)
t-max-icont-min-icon

‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் டப்பிங் பணிகளை நடிகை ஸ்ரீலீலா துவங்கி இருக்கிறார். இது குறித்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘பராசக்தி’. இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந் தேதி 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் பராசக்தி’ படத்தின் டப்பிங் பணிகளை நடிகை ஸ்ரீலீலா துவங்கி இருக்கிறார். தமிழில் அவர் எவ்வாறு வசனங்களை பேசி இருக்கிறார் என்பதைப் பார்க்க பார்வையாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

1 More update

Next Story