ராஜமவுலி இயக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு


ராஜமவுலி  இயக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Nov 2025 7:12 PM IST (Updated: 15 Nov 2025 7:37 PM IST)
t-max-icont-min-icon

ராஜமவுலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘வாரணாசி’ என டைட்டில் அறிவிக்கபட்டுள்ளது.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் ‘எஸ்.எஸ்.எம்.பி 29’ இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இந்த மிகப்பெரிய படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் கதையாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் வரலாறு படைக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். ஒடிஷாவில் முதல்கட்ட படிப்பிடிப்பும் அடுத்ததாக, ஐதராபாத், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

‘எஸ்.எஸ்.எம்.பி 29’ படத்தின் டைட்டில் , பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராஜமவுலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘வாரணாசி’ என டைட்டில் அறிவிக்கபட்டுள்ளது.

1 More update

Next Story