தயாரிப்பாளராகும் 'புஷ்பா' பட இயக்குனரின் மனைவி?

சுகுமாரின் மனைவி தபிதா ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை,
ராஜ் தருண் மற்றும் ஹெபா படேல் நடிப்பில் வெளியான குமாரி 21எப், பலருக்குப் பிடித்த படமாக உள்ளது. புஷ்பா பட இயக்குனர் சுகுமார் எழுதிய இந்த காதல் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. சமூகம் ஒரு சில பெண்களை எப்படிப் பார்க்கிறது என்பதைப் பற்றிய அதன் துணிச்சலான பார்வை கவனம் பெற்றது.
இந்நிலையில், சுகுமாரும் அவரது குழுவினரும் குமாரி 21எப் படத்தின் இரண்டாம் பாகமான குமாரி 22எப் படத்திற்கு தயாராகி வருவதாகவும், சுகுமாரின் மனைவி தபிதா சுகுமார் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இதை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தை இயக்கிய பல்னாட்டி சூர்யா பிரதாப் இந்த இரண்டாம் பாகத்தைவும் இயக்குவாரா அல்லது புதிய இயக்குனரா என்பது இன்னும் தெரியவில்லை. இதற்கிடையில், ராம் சரண் நடிப்பில் இருவாகவிருக்கும் படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் சுகுமார் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.






