உலகளவில் ரீ-ரிலீஸ் ஆகும் ராஜமவுலியின் ’நான் ஈ’

இந்த படத்தில் நானி, சமந்தா, சுதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
சென்னை,
இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஈகா'. தெலுங்கில் வெளியான இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெளியானது. தமிழில் 'நான் ஈ' என்ற பெயரில் வெளியான இந்த படத்தில் நானி, சமந்தா, சுதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு இப்படத்தை மீண்டும் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இது இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும், மீண்டும் உலகளாவிய பார்வையாளர்களை சென்றடையும் நோக்கில் வெளியாக உள்ளது.
தற்போது எஸ்.எஸ். ராஜமவுலி மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கும் வாரணாசி படத்தை இயக்கி வருகிறார். இந்தத படம் 2027 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






