சூர்யா 46 படப்பிடிப்பு நிறைவு - ரிலீஸ் எப்போது?

'லக்கி பாஸ்கர்' படத்திற்குப் பிறகு வெங்கி அட்லூரி இயக்கும் படம் சூர்யா 46
Suriya has wrapped up the Venky Atluri project
Published on

சென்னை,

சூர்யாவின் கம்பேக்கிற்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். கடந்த சில மோசமான படங்கள் மற்றும் பாக்ஸ் ஆபீஸ் தோல்விகள் காரணமாக சூர்யா ரசிகர்கள் கவலையில் உள்ளனர். ரெட்ரோ மற்றும் கங்குவா ஆகியவை பாக்ஸ் ஆபீஸில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

வெங்கி அட்லூரி இயக்கும் அவரது அடுத்த படத்திற்காக அனைத்து சூர்யா ரசிகர்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். தற்போது, படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' என்ற டைட்டில் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ரிலீஸ் தேதி உள்ளிட்ட பல அப்டேட்கள் வெளியாகுய்ம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'லக்கி பாஸ்கர்' படத்திற்குப் பிறகு வெங்கி அட்லூரி இயக்கும் படம் சூர்யா 46. இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடிக்கிறார். ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com