தீபாவளியை குறிவைத்த ஸ்ரீநிதி ஷெட்டியின் அடுத்த படம் - வைரலாகும் வீடியோ

"ஹிட் 3" படத்திற்குப் பிறகு, ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வரும் படம் "தெலுசு கடா",
சென்னை,
இந்த ஆண்டு ஸ்ரீநிதி ஷெட்டியின் 2-வது படம் விரைவில் திரைக்கு வர தயாராகி உள்ளது. "ஹிட் 3" படத்திற்குப் பிறகு, அவர் நடித்து வரும் படம் "தெலுசு கடா", இப்படம் தீபாவளி பண்டிகையை குறிவைத்து அக்டோபர் 17-ம் தேதி வெளியாக உள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளதால், இப்படம் அதிக பார்வையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல ஸ்டைலிஸ்ட் நீரஜா கோனா இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்தில் சித்து ஜொன்னலகட்டா கதாநாயகனாக நடிக்க மற்றொரு கதாநாயகியாக ராஷி கன்னா நடிக்கிறார்.
பீப்பிள் மீடியா பேக்டரி பேனரின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் மற்றும் டிஜி கிருத்தி பிரசாத் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.






