ராஷ்மிகாவின் 'தம்மா' பட இசையமைப்பாளர் கைது...காரணம் என்ன ?

சென்னை,
சமீபத்தில் வெளியான ராஷ்மிகாவின் தம்மா மற்றும் ஷ்ரத்தா கபூரின் 'ஸ்ட்ரீ 2' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த சச்சின் சங்க்வி, தன்னை பாலியல் துன்புறுத்தியதாக இளம் பாடகி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
சச்சின் சங்க்வி இசைத்துறையில் வாய்ப்பு தருவதாக உறுதியளித்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பாலியல் துன்புறுத்தியதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டினார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சச்சினை கைது செய்தனர். பின்னர் சங்க்வி, பாந்த்ரா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீன் பெற்றார்
சச்சின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவரது வழக்கறிஞர் கூறுகையில், "எனது கட்சிக்காரர் மீதான எப்.ஐ.ஆரில் உள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. இந்த வழக்கு விசாரணைக்கு தகுதியற்றது. எனது கட்சிக்காரரை போலீசார் கைது செய்தது சட்டவிரோதமானது, அதனால்தான் அவர் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்" என்றார்.






