ஜான்வி கபூரை அதிர்ச்சி அடைய செய்த நடிகர்


ஜான்வி கபூரை அதிர்ச்சி அடைய செய்த நடிகர்
x

நடிகை ஜான்வி கபூர் 'டூ மச்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை ஜான்வி கபூர். இவர் டூ மச் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியை கஜோல் மற்றும் டுவிங்கிள் கண்ணா தொகுத்து வழங்குகின்றனர். நிகழ்ச்சியில் ஜான்வி கபூர், பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான கரண் ஜோகர் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் கரண் ஜோகரிடம் ஜான்வி கபூர் உங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் ஒரு உண்மையையும் பொய்யையும் சொல்லுங்கள். அதில் எது உண்மை எது பொய் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்வோம் என கேட்டார்.

இதற்கு பதில் அளித்த கரண் ஜோகர் நான் 26 வயதில் என் கன்னித்தன்மையை இழந்தேன். உங்கள் வீட்டில் ஒருவருடன் மிகவும் நெருக்கமாகி விட்டேன் என கூறினார். இதைக்கேட்ட ஜான்விகபூர் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டே இருந்தார். அருகில் இருந்த டுவிங்கிள் கண்ணா அது போனி மாதிரி இல்லையே என்று கூறினார்.

இதையடுத்து கரண் ஜோகர் உங்கள் குடும்பத்தில் யாருடனும் எனக்கு அவ்வளவு நெருக்கம் ஏற்பட வில்லை. ஆனால் சில சமயங்களில் அந்த எண்ணம் எனக்கு வந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story