சுருதிஹாசன் பாடிய 'லெவன்' படத்தின் முதல் பாடல்


தினத்தந்தி 13 Oct 2024 7:18 PM IST (Updated: 13 Oct 2024 7:26 PM IST)
t-max-icont-min-icon

லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள, லெவன் என்ற படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

சென்னை,

இயக்குனர் சுந்தர் சி-யிடம் 'கலகலப்பு 2', 'வந்தா ராஜாவாதான் வருவேன்', 'ஆக்சன்' உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் லோகேஷ் அஜ்ல்ஸ்.

'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'செம்பி' ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான 'லெவன்' திரைப்படத்தை தங்களது மூன்றாவது படைப்பாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர்.

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லெவன்' எனும் திரைப்படத்தில் நவீன் சந்திர, ரியா ஹரி, ஷசாங்க், ரவி வர்மா, கீர்த்தி தாம ராஜு, அபிராமி, 'ஆடுகளம்' நரேன், திலீபன், ரித்விகா, அர்ஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

டி.இமான் இசையில் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் எழுதியுள்ள 'தி டெவில் இஸ் வெயிட்டிங்' பாடலை, நடிகை சுருதிஹாசன் பாடியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் இந்த பாடலுக்கான லிரிக்கல் வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

இந்த முதல் பாடலைப் பற்றி இயக்குனர் கூறுகையில், "தி டெவில் இஸ் வெயிட்டிங் ஆங்கிலத்தில் உயர்தரத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு ஆற்றல்மிக்க பாடல். டி. இம்மானின் இசையும், சுருதிஹாசனின் குரலும் இந்த பாடலுக்கு முக்கிய பலம்" என்றார் .

1 More update

Next Story