தனுஷின் ‘வாத்தி’ படத்தை நிராகரித்த பிரபல நடிகர்...இயக்குனர் சொன்ன விஷயம்


The famous actor who rejected Dhanushs Vaathi...Heres what the director said
x
தினத்தந்தி 21 Oct 2025 9:15 AM IST (Updated: 21 Oct 2025 9:15 AM IST)
t-max-icont-min-icon

வாத்தி படத்தைப் பற்றி சமீபத்தில் ஒரு சுவாரசியமான விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை,

நடிகர் தனுஷ் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று வாத்தி. இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய இந்தப் படத்தில் மலையாள நடிகை சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். சமுத்திரக்கனி, தனிகெல்லா பரணி, சாய் குமார், ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், ஹரிஷ் பேரடி, இளவருசு, ஹைப்பர் ஆதி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

2023 இல் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. ரூ. 60 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட சார், ரூ. 100 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது. இருப்பினும், இந்த படத்தைப் பற்றி சமீபத்தில் ஒரு சுவாரசியமான விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

படத்தின் கதாநாயகனாக தனுஷ் முதலில் தேர்வு செய்யப்படவில்லை. இயக்குனர் வெங்கி அட்லூரி ஆரம்பத்தில் இந்த படத்தின் கதையை ரவி தேஜாவுக்காக தயார் செய்திருக்கிறார். இருப்பினும், ரவி தேஜா பல படங்களில் பிஸியாக இருந்ததால் அதை நிராகரித்திருக்கிறார். இதனால், தனுஷிடம் கதையை கூறி ஓகே செய்திருக்கிறார் இயக்குனர்.

இதை வெங்கி அட்லூரி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறினார். தற்போது, இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரவி தேஜா பிளாக்பஸ்டர் படத்தை தவறவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story