‘கருப்பு’ படத்தின் முதல் பாடல் வெளியானது


The first song from the film ‘Karuppu’ has been released.
x
தினத்தந்தி 20 Oct 2025 1:37 PM IST (Updated: 30 Oct 2025 10:31 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படத்தின் 'காட் மோட்' பாடல் வெளியானது.

சென்னை,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.

மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று, ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘கருப்பு’ படத்தின் முதல் பாடலான காட் மோட் (God Mode) வெளியாகியுள்ளது.

1 More update

Next Story