'தி கேர்ள் பிரண்ட்' - ரூ.1 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பாடல் நீக்கம்

தி கேர்ள் பிரண்ட் படம் வருகிற 7-ம் தேதி திரைக்கு வருகிறது.
சென்னை,
ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தில் உள்ள 'நதிவே' பாடல் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பாடல் ரூ.1 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது.
இந்நிலையில், படத்தின் இறுதிப் பகுதியில் இந்தப் பாடலைச் சேர்க்க வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடல் கதையின் உணர்ச்சி ஓட்டத்துடன் பொருந்தவில்லை என்று தயாரிப்பாளர்கள் உணர்ந்ததாகவும், இதனால் அதனை நீக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
படத்திலிருந்து நீக்கப்பட்டாலும், ‘நதிவே’ பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தி கேர்ள் பிரண்ட் படம் வருகிற 7-ம் தேதி திரைக்கு வருகிறது.
Related Tags :
Next Story






