"பராசக்தி பார்த்தவர்கள் சொல்ற ஒரே வார்த்தை..." - நடிகர் சேத்தன்

‘பராசக்தி’ படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், மொழி உணர்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்ற முன்னெடுப்பிற்காக பாராட்டப்பட்டு வருகிறது.
சென்னை,
சென்னையில் சமீபத்தில் ‘பராசக்தி’ படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் சேத்தன், தனது நன்றியை தெரிவித்தார். அவர் பேசுகையில்,
’அறிஞர் அண்ணாவின் கதாபாத்திரத்தில் நடிக்க என்னை தேர்ந்தெடுத்ததற்கு சுதா கொங்கராவுக்கு ரொம்ப நன்றி. இலங்கையில் முதல் நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு 2-வது நாள் படப்பிடிப்பில் தம்பி சிவகார்த்திகேயனை பார்த்தேன். அப்போது அவர் பார்த்து கூஸ்பம்ஸா இருந்தது என்று சொன்னார். அதன்பிறகு டப்பிங்ல சுதா மேடம் , படத்தின் ஒரு காட்சி பயங்கர கூஸ்பம்ஸா இருந்தது என்றார்.
அதன்பிறகு என்ன ஆனது என்றால், அது சொல்லி பரவுர மாதிரி, எனக்கு வருகிற மெசேஜஸ், சமூக வலைதளங்களில் வரும் கமெண்ட்ஸ் எல்லாம் பாத்தா தொடர்ந்து கூஸ்பம்ப்ஸ் , கூஸ்பம்ஸ் என்றுதான் வந்தது. அந்தமாதிரி ஒரு கூஸ்பம்ஸ் படமாக இது மாறி உள்ளது. எல்லோருக்கும் ரொம்ப நன்றி.’ என்றார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ‘பராசக்தி’ . சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உடன் அதர்வா, ஸ்ரீலீலா போன்ற நடிகர்கள் நடித்திருக்கும் நிலையில், படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
1959ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய மாணவர்கள் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்திருக்கும் பராசக்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், மொழி உணர்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்ற முன்னெடுப்பிற்காக பாராட்டப்பட்டு வருகிறது.






