"தி பாரடைஸ்" படப்பிடிப்பு தாமதம் - ரிலீஸ் தள்ளிவைப்பு?


தி பாரடைஸ் படப்பிடிப்பு தாமதம் - ரிலீஸ் தள்ளிவைப்பு?
x

நானியின் 33-வது படமான ‘தி பாரடைஸ்’ திரைப்படம் 2026 ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவரது நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம்'ஹிட் 3'. பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்து வருகிறது. தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா நானியின் 33-வது படத்தை இயக்குகிறார். 'தி பாரடைஸ்' என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தினை எஸ்எல்வி சினிமாஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே நானியின் ஜெர்ஸி, கேங்ஸ்டர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமைகளும் விற்கப்பட்டுவிட்டன.

'தி பாரடைஸ்' படத்தின் வெளியீடு இப்போது அது கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏனென்றால், இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டு வரும் அரங்குகளின் பணிகள் முழுமையாக முடியவடையாமல் இருக்கிறது. ஆகையால், இதன் படப்பிடிப்பு ஜூலையில் தான் தொடங்கும் என தெரிகிறது. சமீபத்திய தகவலின்படி இந்த படத்தில் 2 கதாநாயகிகள் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டியும் மற்றொரு கதாநாயகியாக கயாடு லோஹரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அண்மையில் 'தி பாரடைஸ்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. 'தி பாரடைஸ்' தீம் பாடல் சமீபத்தில் வெளியானது.

மேலும், நானியுடன் நடிக்கவுள்ள நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. அவர்களும் படப்பிடிப்பு தேதிகள் தெரியாமல் ஒப்பந்தம் செய்யப்படாமல் இருக்கிறார்கள். இதனால் 'தி பாரடைஸ்' படத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு படக்குழுவினர் விரைவில் அதிகாரபூர்வமாக பதிலளிப்பார்கள் என தெரிகிறது.

1 More update

Next Story