"தி பாரடைஸ்" - நானி படத்தில் இணைந்த தேசிய விருது வென்ற நடிகை

நானி நடிக்கும் இப்படம் 2026 மார்ச் 26ம் தேதி வெளியாகிறது.
The Paradise: Sonali Kulkarni’s first look unveiled
Published on

சென்னை,

தேசிய விருது வென்ற நடிகை சோனாலி குல்கர்னி "தி பாரடைஸ்" மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். 1990கள் மற்றும் 2000களின் முற்பகுதியில் தமிழ் மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தபோதிலும், இதுவே அவர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படமாகும். அவரது 51வது பிறந்தநாளை முன்னிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் தசரா. தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான 'தி பாரடைஸ்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 2026 மார்ச் 26ம் தேதி வெளியாகவுள்ளது. மோகன் பாபு மற்றும் ராகவ் ஜுயல் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com