சொன்ன தேதியில் வெளியாகும் - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ’தி ராஜா சாப்" படக்குழு

“தி ராஜா சாப்” திட்டமிட்டபடி வெளியாகும் என்று தயாரிப்பாளர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
சென்னை,
பிரபாஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான “தி ராஜா சாப்” திட்டமிட்டபடி ஜனவரி 9 அன்று வெளியாகும் என்று தயாரிப்பாளர் டிஜி விஸ்வ பிரசாத் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். ஒத்திவைக்கக்கூடும் என்ற வதந்திகள் பரவி வந்த நிலையில், ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள பதிவில், "தி ராஜா சாப்" திட்டமிட்டபடி ஜனவரி 9 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும். போஸ்ட்-புரொடக்சன் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன, எந்த தாமதமும் இல்லை," என்று அதில் தெரிவித்துள்ளார்.
பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த திகில் நகைச்சுவை திரைப்படத்தில் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மாளவிகா மோகனன், ரித்தி குமார் மற்றும் நிதி அகர்வால் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர். இந்த படத்தை மாருதி இயக்குகிறார். தமிழில் மட்டும் இப்படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.






