மேடையில் கண்ணீர் விட்ட நட்சத்திர ஹீரோ

தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை,
1997 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் படமான 'பார்டர்' படத்தின் தொடர்ச்சியான 'பார்டர் 2' படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற ஹீரோ சன்னி தியோல் மேடையில் கண்ணீர் விட்டார்.
தனது தந்தை, பாலிவுட் மூத்த நடிகர் தர்மேந்திராவின் மரணத்திற்குப் பிறகு முதல் முறையாக பொதுவில் தோன்றிய இவர் மேடையில் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டார். தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
'பார்டர் 2' படத்தில் சன்னி தியோல் மேஜர் குல்தீப் சிங் வேடத்தில் நடிக்கிறார். வருண் தவான் மற்றும் தில்ஜித் தோசன்ஜ் ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
Next Story






