படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதி செய்த 'குட் பேட் அக்லி' படக்குழு

'குட் பேட் அக்லி' பட இயக்குனர் ரவிச்சந்திரனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு மீண்டும் 2025 பொங்கலுக்கு படம் வருவதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதி செய்த 'குட் பேட் அக்லி' படக்குழு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'திரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', 'காதலை தேடி நித்யானந்தா, 'வெர்ஜின் மாப்பிள்ளை', 'பஹீரா' உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த 'மார்க் ஆண்டணி' மிகப்பெரிய ஹிட் அடித்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

தற்போது, அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாகவே 'குட் பேட் அக்லி' திரைப்படம் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகாது எனவும் 2025 மே மாதத்தில்தான் வெளியாகும் எனவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது.

இன்று படக்குழுவினர் ஆதிக் ரவிச்சந்திரனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு மீண்டும் படம் 2025 பொங்கலுக்கு வருவதை உறுதி செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com