நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்ட ‘ஹாய்’ படக்குழு

விஷ்ணு எடவன் இயக்கும் ‘ஹாய்’ படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து ‘ஹாய்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தினை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்கி வருகிறார்.
வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில், நடிகை நயன்தாரா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், ‘ஹாய்’ படக்குழு நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story






