நடிகை வரலட்சுமியின் 'போலீஸ் கம்ப்ளெய்ன்ட்' பட டீசர் வெளியீடு

இப்படத்தில் நவீன் சந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சென்னை,
நடிகை வரலட்சுமி சரத்குமாரும், நவீன் சந்திராவும் 'போலீஸ் கம்ப்ளெய்ன்ட்' என்ற புதிய படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இயக்குனர் சஞ்சீவ் மேகோடி இந்தப் படத்தை ஹாரர் திரில்லர் அம்சங்களுடன் முழுமையான பொழுதுபோக்கு படமாக உருவாக்கியுள்ளார்.
சமீபத்தில், இந்தப் படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி ஐதராபாத்தில் உள்ள பிரசாத் லேப்ஸில் திரைப்பட பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது.
எம்.எஸ்.கே. பிரமிதாஸ்ரீ பிலிம்ஸ் பேனரின் கீழ் பாலகிருஷ்ணா மகாராணா தயாரிக்கும் இந்தப் படத்தில் ராகினி திவேதி, ஆதித்யா ஓம், ரவிசங்கர், பிருத்வி, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, சப்தகிரி போன்றவர்களும் நடிக்கின்றனர்.இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.
Related Tags :
Next Story






