'அப்படிப்பட்ட விஷயங்களுக்கு என் அகராதியில் இடமில்லை' - பாலையா

பாலையா - போயபதி ஸ்ரீனு கூட்டணியில் உருவாகியுள்ள படம் அகண்டா 2
சென்னை,
சிம்ஹா, லெஜண்ட், அகண்டா படங்களுக்குப் பிறகு, பாலையா -போயபதி ஸ்ரீனு கூட்டணியில் உருவாகியுள்ள மற்றொரு படம் அகண்டா 2: தாண்டவம். இது அகண்டா படத்தின் தொடர்ச்சியாகும். இதில், ஜெகபதி பாபு மற்றும் ஆதி பினிசெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
சமீபத்தில் இதிலிருந்து அகண்டா தாண்டவம் என்ற பாடலை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். இப்பாடல் வெளியீட்டு நிகழ்வு நேற்று மும்பையில் நடைபெற்றது.
இதில் பாலையா பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவர் பேசுகையில், ‘ரசிகர்களுடனான எனது பிணைப்பு உடைக்க முடியாதது. நான் கடைசியாக நடித்த 4 படங்களும் வெற்றி பெற்றன. அது அகண்டாவிலிருந்து தொடங்கியது. வீர சிம்ஹா ரெட்டி, பகவந்த் கேசரி, டாக்கு மகாராஜ் அனைத்தும் வெற்றிகள். இப்போது அகண்டா தாண்டவம் வருகிறது. எனது இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். கடவுளின் அருளால் நான் முன்னேறி வருகிறேன். என் அகராதியில் இரண்டாவது இன்னிங்ஸுக்கு இடமில்லை’ என்றார்.






