'ரெட்ரோ' படத்தில் இருந்து இதைத்தான் கற்றுக்கொண்டேன் - கார்த்திக் சுப்பராஜ்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'ரெட்ரோ' படம் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 1-ந் தேதி 'ரெட்ரோ' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இந்த நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "ரெட்ரோ படத்தில் இருந்து இனிமேல் ஆன்லைனில் வரும் விமர்சனங்களை படிக்கவே கூடாது என்பதை கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தியேட்டர்களில் ரசிகர்கள் உணர்ச்சியை பார்த்து படம் எப்படி வந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த படத்திற்கு நாங்கள் கிட்டத்தட்ட 300 பேர் வேலை செய்துள்ளோம். ஒரு சிலர் வேண்டுமென்ற படக்குழுவின் மகிழ்ச்சியை கெடுக்க எதிர்மறையாக விமர்சனங்களை எழுதுகின்றனர். அதனால், இனிமேல் ஆன்லைனில் விமர்சனங்களைப் படிக்கவே கூடாது என்று முடித்து செய்துள்ளேன்" என்று கூறினார்.






