ஹாலிவுட் படத்தில் “துப்பாக்கி” பட நடிகரின் புதிய தோற்றம்

‘ஸ்ட்ரீட் பைட்டர்’ ஹாலிவுட் படத்தில் வித்யுத் ஜம்வால் நடித்துள்ளார்.
ஹாலிவுட் படத்தில் “துப்பாக்கி” பட நடிகரின் புதிய தோற்றம்
Published on

இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால், தமிழில், துப்பாக்கி, அஞ்சான், மதராஸி படங்களில் நடித்துள்ளார். இவர் ஸ்ட்ரீட் பைட்டர் என்ற ஹாலிவுட் ஆக்ஷன் படத்தில் நடிப்பதை ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான பாரமவுண்ட் பிக்சர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இவருடன் ஆண்ட்ரு கோஜி, நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா ஆகியோர் நடிக்கின்றனர் என்றும் இந்த படம் கேப்காமின் பிரபலமான வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறப்பட்டது. 

களரி உள்ளிட்ட ஏராளமான தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்ற நடிகர் வித்யூத் ஜம்வாலின், ஆக்சன் காட்சிகளுக்காகவே அவருக்குத் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

இந்த நிலையில், ஸ்ட்ரீட் பைட்டர் எனும் புதிய திரைப்படத்தின் மூலம் நடிகர் வித்யூத் ஜம்வால் ஹாலிவுட்டில் அறிமுகமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், தல்சிம் எனும் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதை சிறப்பு போஸ்டர் வெளியிட்டு படக்குழு இன்றுஉறுதி செய்துள்ளது.

ஸ்ட்ரீட் பைட்டர் திரைப்படத்தில் பிரபல மல்யுத்த வீரர் ரோமன் ரெய்ன்ஸ் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் 2026-ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி வெளியாகும் என்று பாரமவுண்ட் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com