"ஓஹோ எந்தன் பேபி" படத்தின் டைட்டில் டிராக் வெளியீடு

நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி நடித்துள்ள 'ஓஹோ எந்தன் பேபி'படம் வருகிற ஜூலை 11ம் தேதி வெளியாகிறது.
"ஓஹோ எந்தன் பேபி" படத்தின் டைட்டில் டிராக் வெளியீடு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் விஷ்ணு விஷால். இவருடைய தம்பி ருத்ரா 'ஓஹோ எந்தன் பேபி' என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தினை விளம்பரப் பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இதில் பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் டி-கம்பெனி இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் டைட்டில் டிராக் வெளியாகி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com