18 நாட்களுக்கு பிறகு எட்டிய முடிவு...டோலிவுட்டில் மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு

ஊதிய உயர்வு கோரி, தெலுங்கு திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பினர் கடந்த 3-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐதராபாத்,
18 நாட்களாக நீடித்த தெலுங்கு திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பினரின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. படப்பிடிப்புகள் இன்று மீண்டும் தொடங்கி உள்ளன.
சினிமா தொழிலாளர்களுக்கு மூன்று வருடத்துக்கு ஒரு முறை ஊதியம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். கடந்த 4 வருடங்களாக தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு ஊதியம் மாற்றி அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஊதிய உயர்வு கோரி, தெலுங்கு திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பினர் கடந்த 3-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டோலிவுட்டில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன்.
இந்நிலையில், 18 நாட்களாக நடந்த இந்த போராட்டத்தில் முடிவு எட்டியநிலையில், இன்று படப்பிடிப்பு மீண்டும் துவங்கி இருக்கிறது.
Next Story






