டோவினோ தாமஸின் "நரிவேட்டை" ரிலீஸ் தேதி அறிவிப்பு


டோவினோ தாமஸின் நரிவேட்டை ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 25 March 2025 6:36 PM IST (Updated: 25 March 2025 6:38 PM IST)
t-max-icont-min-icon

உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் 'நரிவேட்டை' படத்தை அனுராஜ் மனோகர் இயக்கி வருகிறார்.

திருவனந்தபுரம்,

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் 'மாரி, மின்னல் முரளி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸுக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் பிருத்விராஜ் இயக்கத்தில் எல் 2 எம்புரான் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.

இது மட்டுமில்லாமல் அனுராஜ் மனோகர் இயக்கும் 'நரி வேட்டை' என்ற படத்தில் நடித்து வருகிறார். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் சேரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தமிழில் பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன் நடிக்கும் முதல் மலையாள படம் இதுவாகும். நரி வேட்டை படத்தில் நடிகர் சேரனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகி வைரலானது. அதன்படி, இப்படத்தில் சேரன் போலீஸ் அதிகாரியாக 'கேசவதாஸ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் டோவினோ தாமஸ் நடிக்கும் "நரிவேட்டை" படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் மே 16ம் தேதி வெளியாகிறது.

1 More update

Next Story