‘ஸ்பிரிட்’படத்தில் இணைந்த ரவி தேஜா மகன்...வைரலாகும் புகைப்படம்

‘ஸ்பிரிட்’ படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது
Trivikram and Ravi Teja’s sons join the team of ‘Spirit’
Published on

சென்னை,

பிரபாஸ், தற்போது 'தி ராஜா சாப்' மற்றும் 'பவுஜி' ஆகிய படங்களில் மும்முரமாக உள்ளார். இவை தவிர, இன்னும் பல படங்கள் அவர் கைவசம் உள்ளன. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ள ஸ்பிரிட் படமும் அதில் ஒன்று. ஸ்பிரிட் படத்தில் பாலிவுட் நடிகை திரிப்தி திம்ரி கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில், ஸ்பிரிட் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. நடிகர் சிரஞ்சீவி கிளப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

ஐதராபாத்தில் நடந்த "ஸ்பிரிட்" படத்தின் பூஜை விழாவில் நடிகர் ரவி தேஜாவின் மகன் மற்றும் இயக்குனர் திரிவிக்ரமின் மகன் கலந்துகொண்டனர். ரவி தேஜாவின் மகன் மகாதனும், திரிவிக்ரமின் மகன் ரிஷியும் "ஸ்பிரிட்" படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com