தொழிலதிபர் மகள் திருமணத்தில் கவனத்தை ஈர்த்த ராம் சரண்


Viral Pics: Ram Charan Steals the Spotlight at Mantena Wedding; Meets Donald Trump Jr and Others
x

தொழிலதிபர் ராஜு ராமலிங்கத்தின் மகள் மந்தேனாவின் திருமணத்தில் நடிகர் ராம் சரண் கலந்துகொண்டார்.

உதய்பூர்,

தொழிலதிபர் ராஜு ராமலிங்கத்தின் மகள் மந்தேனாவின் திருமணத்தில் நடிகர் ராம் சரண் கலந்துகொண்டு கவனத்தை ஈர்த்தார்.

உதய்பூரில் நடந்த மந்தேனா மற்றும் வம்சி காடிராஜுவின் திருமணத்தில் ராம் சரண் கலந்து கொண்டார். அவரது புகைப்படங்கள் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இவ்விழாவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் ஐஐஎப்எ(IIFA) நிறுவனர் ஆண்ட்ரே டிம்மின்ஸ் உள்ளிட்டோரையும் ராம் சரண் சந்தித்தார்.

தற்போது ’பெத்தி’ படத்தில் ராம் சரண் நடித்துள்ளார். மேலும், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் அடுத்தாண்டு மார்ச் 27-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான 'சிகிரி சிகிரி' பாடல் தொடர்ந்து இணையத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

1 More update

Next Story