விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் திருமணம் எப்போது எங்கு நடைபெறுகிறது? வெளியான தகவல்

இவர்களின் திருமணம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் திருமணம் எப்போது எங்கு நடைபெறுகிறது? வெளியான தகவல்
Published on

விஜய் தேவரகொண்டாவும் , ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாக நீண்ட காலமாக வதந்தி பரவி வருகிறது . இருப்பினும் , இருவரும் தங்கள் உறவு குறித்து அதிகாரபூர்வமாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ' கீதா கோவிந்தம் ' மற்றும் ' டியர் காம்ரேட் ' படங்கள் மூலம் அவர்களுக்கு இடையே உருவான நட்பு காலப்போக்கில் காதலாக மாறியுள்ளதாக திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

இதற்கிடையில், இந்த ஜோடி கடந்த அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. அதில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. அந்த நிச்சயதார்த்தம் குறித்து அவர்கள் இருவரும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லையெனினும், இருவரின் கைகளிலும் ஒரே மாதிரியான மோதிரங்கள் அணிந்த புகைப்படங்கள் வெளியானது.

இந்த நிலையில், இவர்களின் திருமணம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்ப்பூர் அரண்மனையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதியில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மணமக்களின் வீட்டார் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com