மம்முட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள "சத்தா பச்சா" படம் தமிழில் வெளியாவது எப்போது?


மம்முட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சத்தா பச்சா படம் தமிழில் வெளியாவது எப்போது?
x

மலையாளத்தில் வரவேற்பை பெற்று வரும் இப்படம் தமிழிலும் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

அத்வைத் நாயர் இயக்கத்தில் நடிகர்கள் அசோகன், ரோஷன் மேத்யூ, விஷாக் நாயர் மற்றும் இஷான் சௌகத் ஆகியோர் நடித்துள்ள மலையாள படம் ‘சத்தா பச்சா’. இசையமைப்பாளர்கள் ஷங்கர்-இஷ்ஸான்-லோய் கூட்டணி இசையமைக்கும் முதல் மலையாள திரைப்படமான ‘சத்தா பச்சா’ கடந்த 22ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தில் மம்முட்டி, துல்கர் சல்மான் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கான முதல் டிக்கெட்டை நடிகர் மோகன்லால் வாங்கிய வீடியோவை படக்குழு வெளியிட்டது. மலையாளத்தில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் ரூ. 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மலையாளத்தில் வரவேற்பை பெற்று வரும் இப்படம் தமிழிலும் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 30ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story