நீங்களும் அதில் ஒருவர் தானே... ஜெகபதிபாபு கேள்விக்கு ரம்யா கிருஷ்ணன் அளித்த பதில்

ஜெகபதி பாபுவும், ரம்யா கிருஷ்ணனும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வரும் சீனியர் நடிகையான ரம்யா கிருஷ்ணன் 'அம்மன்', 'படையப்பா', பாகுபலி' ஆகிய படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். கடைசியாக ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடித்திருந்தார். தற்போது ஜெயிலர்-2' படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் வில்லன் நடிகரான ஜெகபதி பாபு தெலுங்கில் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது ரம்யா கிருஷ்ணனிடம், 'சிறுவயதில் இருந்தே உங்களை பலர் 'சைட்' அடித்திருப்பார்கள்' என ஜெகபதி பாபு கூற, 'நீங்களும் அதில் ஒருவர் தானே' என ரம்யா கிருஷ்ணன் பதிலளித்தார்.

ஜெகபதி பாபுவும், ரம்யா கிருஷ்ணனும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com