பிரபு சாலமனின் “கும்கி 2” - சினிமா விமர்சனம்

பிரபு சாலமன் இயக்கத்தில் மதி நடிப்பில் வெளியான ‘கும்கி 2’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
பிரபு சாலமனின் “கும்கி 2” - சினிமா விமர்சனம்
Published on

மலை கிராமத்தில் வாழும் மதி, வழி தவறி பள்ளத்தில் சிக்கிக்கொண்ட குட்டி யானையை மீட்கிறார். அதிலிருந்து குட்டி யானை மதியை சுற்றி சுற்றி வருகிறது. குட்டி யானையை சகோதரன் போலவே பாவித்து அன்பு காட்டி வளர்த்து வரும் மதி, ஒருகட்டத்தில் திடீரென யானை மாயமாகிப்போக, நிலை குலைந்து போகிறார்.

இதற்கிடையே கல்லூரி படிப்புக்காக வெளியூர் செல்லும் மதி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சொந்த ஊர் திரும்புகிறார்.அந்த சமயம் மாயமான யானை பற்றிய ரகசிய தகவல் ஒன்று அவருக்கு கிடைக்கிறது. அதன் பேரில் யானையைத் தேடி செல்கிறார் மதி. மாயமான யானை மறுபடியும் கிடைத்ததா? யானை மாயமாகி போனதின் மர்மம் என்ன? என்பதே மீதி கதை.

முதல் படத்திலேயே ஆழமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார் மதி. யானைக்கும், அவருக்குமான பாச போராட்டம் நெகிழ்ச்சி. கதாநாயகி ஷிரிதா ராவ் ஒரு சில காட்சிகளே வந்து செல்வது யோசிக்க வைக்கிறது.

வனத்துறை அதிகாரியாக வரும் அர்ஜுன் தாசின் அலட்டல் இல்லாத நடிப்பு மிரட்டல் தருகிறது. ஆண்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெராடி, ஸ்ரீநாத் என அனைவரும் கொடுத்த வேலையைச் சிறப்பாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவில் முடிந்ததைச் செய்திருக்கிறார் எம்.சுகுமார். நிவாஸ் கே பிரசன்னாவின் இசை ஓ.கே. ரகம். யானைக்கும், மனிதனுக்கும் இடையே சொல்லப்படும் பாச காட்சிகள் பலம். திரைக்கதையில் இருக்கும் சுவாரசியம் காட்சிகளில் இல்லாமல் போனது பலவீனம். முதல் பாகத்தை ஒப்பிடுகையில் எதிர்பார்த்த புதிய விஷயங்கள் இல்லாதது ஏமாற்றம்.

எதார்த்தமான, நேர்த்தியான காட்சிகள் கொண்ட தொகுப்பாக படத்தை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் பிரபு சாலமன்.

கும்கி 2 - சோளப்பொரி.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com