ஓ.டி.டி.யில் வெளியாகும் 'எ கொயட் பிளேஸ்: டே ஒன்'?
'எ கொயட் பிளேஸ்: டே ஒன்' படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
'எ கொயட் பிளேஸ்: டே ஒன்' என்பது மைக்கேல் சர்னோஸ்கி எழுதி இயக்கிய ஹாலிவுட் திகில் திரைப்படமாகும். இப்படம் நடிகர் மற்றும் இயக்குனரான ஜான் கிராசின்ஸ்கியின் 2018-ல் வெளியான 'எ கொயட் பிளேஸ்' மற்றும் 2021-ல் வெளியான 'எ கொயட் பிளேஸ்: பார்ட் II' ஆகிய படங்களுக்கு முன்பு அமைந்த கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தில் ஜோசப் குவின், அலெக்ஸ் வோல்ப், லூபிடா நியோங்கோ மற்றும் அலெக்சாண்டர் ஜான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம், வேற்றுகிரக வாசிகளின் தாக்குதலிலிருந்து மக்கள் எவ்வாறு உயிர் பிழைக்கிறார்கள் என்ற கதையாகும்.
இந்த படம் கடந்த மாதம் 28-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலக அளவில் $245.9 மில்லியனுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது இந்த படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 'எ கொயட் பிளேஸ்: டே ஒன்' படம் நாளை ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளதாக தெரிகிறது. ஆனால், படக்குழு இதனை உறுதிப்படுத்தவில்லை.