’காந்தாரா: சாப்டர் 1’ - பிரபல ஓடிடி நிறுவனம் வெளியிட்ட முக்கிய அப்டேட்

இந்த ஆண்டில் இந்தியாவின் அதிக வசூல் செய்த படமாக காந்தாரா: சாப்டர் 1 மாறியுள்ளது.
சென்னை,
ரிஷப் ஷெட்டியின் காந்தாரா: சாப்டர் 1 பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. உலகளவில் ரூ. 818 கோடிக்கு மேல் வசூலித்து 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது.
இப்போது, ரசிகர்கள் ஓடிடி ரிலீஸ் தேதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில், ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு விரைவில் வரவிருப்பதைக் குறிக்கும் வகையில், அமேசான் பிரைம் வீடியோ ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்தில் ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவையா, ஜெயராம், பிரமோத் ஷெட்டி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
Related Tags :
Next Story






