"ஹார்ட்டிலே பேட்டரி" முதல் "பெஸ்டி" வரை... இந்த வார ஓடிடி ரிலீஸ்

இந்த வாரம் எந்தெந்த படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதை காணலாம்.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து. பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
படங்கள் | ஓடிடி தளங்கள் |
ஹார்ட்டிலே பேட்டரி | ஜீ5 |
உன் பார்வையில் | சன் நெக்ஸ்ட் |
மிஸஸ் தேஷ்பாண்டே | ஜியோ ஹாட்ஸ்டார் |
பிரேமண்டே | நெட்பிளிக்ஸ் |
பார்மா | ஜியோ ஹாட்ஸ்டார் |
டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் | ஜீ5 |
பெஸ்டி | மனோரமா மேக்ஸ் |
ஹார்ட்டிலே பேட்டரி
ரெமாண்டிக் சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘ஹார்ட்டிலே பேட்டரி’. இதனை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார். இதில் குரு லக்சுமன், பதின் குமார், சுமித்ரா தேவி, அனித் யாஷ் பால், யோகா லட்சுமி, இனியாள், ஜீவா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 16ந் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகி உள்ளது.
உன் பார்வையில்
காதலும், திகிலும் கலந்த 'உன் பார்வையில்' என்ற படத்தில், கணேஷ் வெங்கட்ராம் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் பார்வையற்ற பெண்ணாக பார்வதி நாயர் நடிக்கிறார். இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாக உள்ளது.
மிஸஸ் தேஷ்பாண்டே
சீரியல் கில்லராக மாதுரி தீட்சித் நடித்துள்ள 'மிஸஸ் தேஷ்பாண்டே' திரைப்படம். விறுவிறுப்பான உளவியல் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை நாகேஷ் குகுனூர் இயக்கியுள்ளார். இதை அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் குகுனூர் மூவிஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இப்படம் நாளை ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது.
பிரேமண்டே
நவநீத ஸ்ரீராம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் இந்த படத்தில் தெலுங்கு ஹீரோ பிரியதர்ஷி புலிகொண்டா கதாநாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ஆனந்தி நடித்துள்ளார். காதல் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.
பார்மா
பி.ஆர். அருண் இயக்கத்தில் நிவின் பாலி , ரஜித் கபூர், நரேன், வீணா நந்தகுமார், ஸ்ருதி ராமச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியாக உள்ள படம் பார்மா. இப்படம் நாளை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது.
டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான படம் 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் '. மம்முட்டி , கோகுல் சுரேஷ், சுஷ்மிதா பட், விஜி வெங்கடேஷ், சித்திக், வினீத், விஜய் பாபு, மீனாட்சி உன்னிகிருஷ்ணன், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் நாளை ஜீ5 ஓடிடியில் வெளியாக உள்ளது.
பெஸ்டி
பேமிலி திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள படம் பெஸ்டி. இதை ஷானு சமத் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஆஷ்கர் சவுதான், ஷாஹீன் சித்திக், சாக்ஷி அகர்வால் மற்றும் ஸ்ரவணா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் நாளை மனோரமா மேக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.






